ஆவடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஆவடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம்  தங்க சங்கிலி பறிப்பு
X
ஆவடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மர்ம நபர் வழி மறைத்து தங்கச் சங்கிலி பறித்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோவில் பதாகை சுவாமி பகுதியில் வசித்து வருபவர் உமா(வயது40).இவருக்கு திருமணம் ஆகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தன் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தன் வேலை காரணமாக செங்குன்றம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மாலை திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் யாரும் இல்லாத இடத்தை பார்த்து திடீரென உமா வந்த இருசக்கர வாகனத்தை முன்னே சென்று மடக்கி நிறுத்தி கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்த போது உமா கூச்சலிட்டார்.

ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் உமாவை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த செயினை இறுக்கமாக இழுத்த போது இரண்டு சவரன் அளவில் பாதி செயினை அறுத்துக் கொண்டு அவர் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து உமா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி .கண்காணிப்பு கேமராக்களின் பதிவு ஆகிய காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai solutions for small business