சென்னை கொரட்டூரில் சிக்னலில் பைக் மீது பேருந்து மோதியதால் பெண் உயிரிழப்பு

சென்னை கொரட்டூரில் சிக்னலில் பைக் மீது பேருந்து மோதியதால் பெண் உயிரிழப்பு
X

கொரட்டூரில் பஸ் மோதி பெண் உயிரிழந்தார் (மாதிரி படம்)

சென்னை கொரட்டூரில் சிக்னலில் பைக் மீது பேருந்து மோதியதால் பெண் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொரட்டூர் வடக்கு சிக்னல் அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக் குறைவால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை கொளத்தூர் பூம்முகர் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் இவருடைய மனைவி வித்யா வயது 34 இவர் சென்னை பாடி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் தான் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பூம்புமுகர் நகரில் உள்ள தன் வீட்டிற்கு வித்யா இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது கொரட்டூர் வடக்கு சிக்னலில் சிக்னலுக்காக வித்யா நின்றுள்ளார். அப்பொழுது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாதவரம் நோக்கி சென்ற அரசு பேருந்து தட எண் 114.சிக்னலில் சிவப்பு லைட் போடப்பட்டிருந்தும் அதை மதிக்காமல் அலட்சியமாக பேருந்து ஓட்டுனர் ரமேஷ் பேருந்தை வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்துக்கு முன்பு நின்று கொண்டிருந்த வித்யாவின் மீது வேகமாக அரசு பேருந்து மோதியதால் நிலை தடுமாறிய வித்யா பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கினார்.

இதனை பொருட்படுத்தாமல் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை வேகமாக எடுத்ததால் வித்யா, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு சிறிது நேரம் பரபரப்பும், பதட்டமான சூழலும் ஏற்பட்டது. பொதுமக்கள் ஓட்டுனர் ரமேஷை தர்ம அடி கொடுத்து மூக்கை உடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் வித்யாவின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

விபத்து ஏற்படுத்திய அரசு ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததை அடுத்து அவருக்கு முதற்கட்ட மருத்துவ உதவிகள் செய்து கைது செய்த போலீசார் அவர் விசாரணைக்காக கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். சிக்னல் பகுதியில் நின்றிருந்த பெண் மீது பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
ai as the future