குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை

குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை
X

போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர்.

நண்பர்களுடன் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 27) இவர் கூலி வேலை செய்து வந்தார்.கடந்த மூன்று வருடத்திற்கு முன் கயல் (22) என்கின்ற திருநங்கை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.கடந்த வாரம் காஜா மொய்தீன், இவரது மனைவி கயல் (திருநங்கை) இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவியிடம் கோபித்துக் கொண்டு ஒரு வார காலமாக ஆவடியில் உள்ள நண்பரான கார்த்திக் (வயது 21)ஆட்டோ ஓட்டுநர் என்பவரது வீட்டில் தங்கி வந்தார்.

நேற்று இரவு இவர் தங்கி இருந்த நண்பர் கார்த்தி வீட்டில் லோகேஷ் (வயது 25), ராஜசேகரன் (வயது25), அஜித் (வயது 21), சரத்குமார் (வயது 21), லலித் (வயது21), விக்னேஷ் (வயது 20), சாந்தகுமார் (வயது21) ஆசிப் உள்ளிட்ட ஒன்பது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இந்த நிலையில் காஜா மொய்தீன் கார்த்திக்கு கடனாக ரூபாய் 25 ஆயிரம் கொடுத்துள்ளாராம் இதனிடையே போதையில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவரது நண்பர்கள் ஆத்திரம் அடைந்து காஜா மொய்தீனை கத்தி, பீர் பாட்டில் போன்ற பயங்கர ஆயுதங்களால் தலை, கை, வயிறு ஆகிய இடத்தில் பலமாக தாக்கி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.


இவருடன் தங்கி இருந்த சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆசிப் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த காஜா மொய்தீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பிச்சென்ற இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.நண்பர்களிடம் கடன் வாங்கிய நிலையில் திரும்பி கொடுக்காததால் குடிபோதையில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது