ஆவடியில் புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

ஆவடியில் புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரியில் திடீர்  தீ
X

லாரி தீ பிடித்து எரிந்த காட்சி.

ஆவடியில் புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரி திடீர் என தீ பிடித்து எரிந்தது.

ஆவடி அருகே வெளி மாநிலத்தில் இருந்து புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கவரப்பாளையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய சரக்கு லாரிகளை நிறுத்துவது வழக்கம். இதனால் எப்பொழுதும் போல் அதே இடத்தில் பூனே பஜாஜ் தொழிற்சாலையில் இருந்து சென்னைக்கு சுமார் 40 பஜாஜ் உயர்ரக இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்த வெளிமாநில லாரி ஒன்று சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரில் இருந்து திடீரென கரும்புகைகள் வெளிவந்தன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை விட்டு வெளியேறினார். பின்னர் திடீரென்று லாரியிலிருந்து பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டது . இதனை கேட்ட சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, லாரியை நோட்டுமிட்டனர்.இந்த நேரத்தில் திடீரென லாரியில் இருந்து மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்ட புதிய வகை இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகியது.

இந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 40 இரு சக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது முதல் கட்ட விசாரணையில், ஆவடி கவரப்பாளையம், சாலை அருகே கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது, மேலே உள்ள மின்சார ஒயர் அறுந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்த காரணத்தினால் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story