ஆவடி அருகே மினி பேருந்து மோதி குழந்தை உயிரிழப்பு

ஆவடி அருகே மினி பேருந்து மோதி குழந்தை உயிரிழப்பு
X

சாலை விபத்தில் இறந்த குழந்தை.

ஆவடி அருகே மினி பேருந்து மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அருகே குழந்தை மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியில் தனியாருக்கு செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த காசி மணி(25) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(5) தனுஸ்ரீ(4) இரண்டு பெண் குழந்தைகள் ஒன்றரை வயது மதிக்கத்தக்க யுவா என்கிற மகன் உண்டு. காசி மணி உறவினர் செல்வம் என்பவர் குழந்தை யுவாவை அழைத்துக்கொண்டு மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை கீழே இறக்கி விட்டு பொருட்களை வாங்கும் போது குழந்தை எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற போது ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகர மினி பேருந்து குழந்தை மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு ஒன்றரை வயது குழந்தை யுவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்து போனது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் குழந்தையின் உயிரற்ற உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. பேருந்து ஓட்டுநர் இளங்கோவனை(50) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவர்றிந்த குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆவடி பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து கைது கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வாங்கி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Tags

Next Story