திருநின்றவூரில் 12 வயது யோகா மாணவி புதிய உலக சாதனை

திருநின்றவூரில் 12 வயது யோகா மாணவி புதிய உலக சாதனை
X

சாதனை படைத்த தீப்திக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டது.

திருநின்றவூரில் 12 வயது யோகா மாணவி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நோபல் வேல்டு ரேக்கார்டு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் திருநின்றவூர் பகுதியில் வசித்துவரும் நந்தகுமார் -பவானி ஆகியோரின் மகள் என்.தீப்தி வயது 12 ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திருப்தி யோகா பயிற்சி பள்ளியில் சேர்ந்து தலைமை பயிற்சியாளர் யோகரத்னா ஸ்ரீநித்யானந்தம் இடம் பயிற்சி பெற்று உப்ப விஷ்ட கோணாசனம் யோகா நிலையில் இருந்தப்படி சுமார் 2 மணி நேரத்தில் நோபல் வேல்டு ரேக்கார்டு தீர்ப்பாளர் இசக்கிராஜ் முன்னிலையில் பாரதமாதா படத்தை வரைந்து காண்பித்து புதிய உலக சாதனை படைத்தார்.

பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருநின்றவூர் சரக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாதனை படைத்த தீப்திக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினர். இதில் யோகா சக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil