ஆவடி தொகுதியில் 68.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் தொடக்கம்

கூடுதல் பள்ளி கட்டிடம் , அங்கன்வாடி, மழைநீர்வடி கால்வாய், சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணி துவக்க விழாவில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது குடிநீர், சீரான சாலை, மழைநீர், கழிவுநீர் கால்வாய் கூடுதல் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி பகுதியில் அங்கன்வாடி மையம், மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து 15லட்வம் மதிப்பீட்டில் சோழன் நகரில் மழைநீர் கால்வாய், ஒன்றிய ஊராட்சி பொது நிதியிலிருந்து 10லட்சம் மதிப்பீட்டில் மாசிலாமணி தெருவில் சிமெண்ட் சாலை மேலும் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்யமூர்த்தி நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவடி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் கூடுதல் பள்ளி கட்டிடம் , அங்கன்வாடி, மழைநீர்வடி கால்வாய், சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணி துவக்க விழாவில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது திருமுல்லைவாயில் மேல்நிலை பள்ளியில் பயின்று காவல் துறை மற்றும் ஊடக துறையில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி வகுப்பறையை கட்டுவதற்காக உதவியதாக அமைச்சருக்கு முன்னாள் மாணவர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, மாநில மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், நகர மன்ற தலைவர் உஷாராணி ரவி, பகுதிச் செயலாளர் பேபிசேகர், ஒன்றிய நகர செயலாளர்கள் தி.வை.ரவி, ப.சா.கமலேஷ், ஒன்றிய குழ துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம், ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் தேவபிரியா சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்செல்வி.
நிர்வாகிகள் கே.சுரேஷ்குமார், பா.கந்தன், எம்.குணசேகரன், ஜி.சுகுமார், ஜெ.சாக்ரடீஸ், எஸ்.கமலக்கண்ணன், ஜி.பி.பரணிதரன், பிரதீப், ஆரோக்கியமேரி, எப்சி(எ)மீனாட்சி, ஊராட்சி மன்ற துணை தலைவர் வாசுகி எட்வின், பரமேஸ்வரன், கிளைச் செயலாளர்கள் டி.கே.தனசேகர், ஜி.ஆபிரகாம், டி.கே.மோகன், எம்.கந்தசாமி, ஜி.தேவநேசன், எம்.வித்யாசாகர், கு.வில்லாளன், என்.டி.அரி, இ.கென்னடி, கே.ஜி.ஆர். எஸ்.ஸ்டாலின், வார்டு உறுப்பினரகள் டி.தினேஷ்குமார், பி.முருகன், உதயகுமாரி, லோகநாதன், கவியரசு, நீலாதேவி உள்பட அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu