ஆவடி-கூடுவாஞ்சேரி புதிய ரயில் தடம் அமைக்க முதல் கட்ட நிதி ஒதுக்கீடு.

Aavadi to Guduvancheri Train
Aavadi to Guduvancheri Train-திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முதல் கூடுவாஞ்சேரி வரையிலான புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகளுக்கு, முதல் கட்டமாக ₹.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் சென்னை சென்ட்ரல்லிருந்து ஆவடி மார்க்கமாக திருவள்ளூர், அரக்கோணம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் தாம்பரம், கூடுவாஞ்சேரி வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் திருவள்ளூரில் இருந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை கிடையாது என பலர் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இவ்வழியே ரயில் பாதைகளும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திமுக சார்ந்த டி.ஆர்.பாலு ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை சுமார் 60 கி.மீ. தூரம் தொலைவில் புதிய ரயில் தடம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் அதன்பின் இந்தத் ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பத்தாண்டுகள் ஆகிய நிலையில் மீண்டும் இந்த வழி தடத்தில் நிலம் அளவீடு செய்து. தொடர்ந்து ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ₹.864 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்ட நிலையில் இந்தத் திட்ட பணிகளுக்காக முதற்கட்டமாக ரயில்வே துறை ₹.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வேகமெடுக்கும் ஆவடி- கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை
ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி திட்டமானது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இருங்காட்டுக்கோட்டை வரை ரூ.839 கோடி செலவில் முதன்முதலில் 2013-14ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. ஆய்வுகள் மற்றும் பூர்வாங்கப் பணிகளுக்காக ரயில்வே 48 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மேலும் 2020-21ம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்கு 1 கோடி ரூபாய் கிடைத்தது. இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இருங்காட்டுக்கோட்டை வரையிலான கிளை வழித்தடத்தை கொண்ட 60 கி.மீ., பாதைக்கான இறுதி இட ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய பாதையானது, ஸ்ரீபெரும்புதூர் தொழில் மையத்தின் வழியாக மேற்கு மற்றும் தெற்கு கோட்டத்தை நகரத்திலிருந்து இணைக்கும்.
இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணி வழங்கப்பட்டதும், ஆறு மாதங்களில் முடிக்கப்படும். இந்த கணக்கெடுப்பில் நிலப்பரப்பு, பாதைகளின் சீரமைப்பு, நிலையங்களுக்கான இடம், பணிக்கான செலவு மற்றும் திட்ட அறிக்கை ஆகியவை பட்டியலிடப்படும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க கணக்கெடுப்பின் போது மதிப்பிடப்பட்ட பகுதிகளில் இது செய்யப்படும். ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள தொழில்துறை பகுதிகளிலிருந்து சரக்குகளை ஈர்க்கும் வகையில் இந்த பாதை கட்டுமானத்திற்காக புதுப்பிக்கப்படுவதாக அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். இந்நிலையில் இத்திட்டப்பணிகளுக்கு முதல்கட்டமாக 58 கோடி நிதிய ஒதுக்கியுள்ளாதால் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu