ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4.பேருக்கு சிறை

ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4.பேருக்கு சிறை
X
அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (30), விஜய் (21), மணிகண்டன் (26), அம்பத்தூர் ராமன் (20) என்று தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4.பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆவடி அருகே, பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் பாபு (36). இவர், பட்டாபிராம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். பாபு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக இருசக்கர மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அதை தனது வெல்டிங் கடை அருகே நிறுத்தியிருந்தார்.

வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு வருவதற்குள், அவர் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் அவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல், பட்டாபிராம் பகுதியில் வீடு மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பலரின் இருசக்கர வாகனங்களும் திருடுபோய் கொண்டிருந்தன.

இந்நிலையில், பட்டாபிராம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நின்றிருந்த பைக்குகளை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திருட முயற்சி செய்தபோது.அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் கொள்ளையர்கள் ஓட தொடங்கினார். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (30), விஜய் (21), மணிகண்டன் (26), அம்பத்தூர் ராமன் (20) என்று தெரியவந்தது. மேலும், இவர்கள் 4 பேரும் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வீடுகள் முன்பு நிறுத்திவைத்திருந்த பாபுவின் பைக் உள்பட பல்வேறு இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

திருடிய வாகனங்களை, குறைந்த விலைக்கு விற்று அப்பணத்தை வைத்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. போலீசார் இவர்கள், மீது வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர், இதனை அடுத்து 4.பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story