அயப்பாக்கத்தில் விரைவில் ஆக்சிஜன் வசதியுடன் 200 கொரோனா படுக்கைகள்

அயப்பாக்கத்தில் விரைவில் ஆக்சிஜன் வசதியுடன் 200 கொரோனா படுக்கைகள்
X

மதுரவாயில் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி பேட்டி அளித்தபோது.

அயப்பாக்கத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 200 கொரோனா படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். மதுரவாயல் எம்எல்ஏ கணபதி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண தொகையாக 2000 ரூபாயை மதுரவாயல் த சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் வழங்கி தொடங்கி வைத்தார்.

அயப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.உடன் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, துணை தலைவர் யுவராஜா உள்ளிட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் பொதுப்பணித் துறையால் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தில் 200 சிறப்பு படுக்கைகளுடன் ஆக்சிஜன் வசதிகளுடன் ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததாக கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!