10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை

10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

அம்பேத்கார் நகர் பகுதியில் 10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎப் டாக்டர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் சதீஷ், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதில் மகளும் 10 வயதில் ரித்திஷ் என்ற மகனும் உள்ளனர். ரித்தீஷ் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சதீஷ் வழக்கம்போல் ஆட்டோ ஓட்ட சென்றுள்ளார். வீட்டில் மகள், மகன் ரித்தீஷ், தாத்தா முரளி ஆகியோர் இருந்துள்ளனர். சிறுவன் வெளியே விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

குளியலறைக்குச் சென்ற ரித்தீஷ் வெகு நேரமாகியும் வெளியே வராததால் ரித்தீஷின் சகோதரி சென்று பார்த்தபோது கதவு மூடிய நிலையில் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து கதவை உடைத்து பார்த்தபோது குளியலறையில் இருந்த ஜன்னல் கம்பியில் வேஷ்டி துணியால் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

உடனடியாக ஐசிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ஐசிஎப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!