கோவில்பதாகை: முன்விரோதம் காரணமாக தாய், மகன்கள் உட்பட 4 பேரை வெட்டிய 6 பேர் கைது!

கோவில்பதாகை: முன்விரோதம் காரணமாக தாய், மகன்கள் உட்பட 4 பேரை வெட்டிய 6 பேர் கைது!
X
ஆவடி அடுத்த கோவில்பதாகையில் முன்விரோதம் காரணமாக தாய், மகன்கள் உட்பட 4 பேரை வெட்டிய 6 பேர் கைது.

சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (24) இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டருகே என் நண்பர் மணிகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 டூவீலரில் வந்த கும்பல் கத்தியால் வெட்டியது. அதை தடுக்க முயன்ற அவரது நண்பர் மணிகண்டன் (24), தாய் பத்மா (45), அண்ணன் பிரகாஷ் (28) ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷின் அண்ணன் பிரகாஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த கரன் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் கேரம் போர்ட் விளையாட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ் கரணை தாக்கியுள்ளார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் கரன் தன் நண்பருடன் பிரகாஷ் வெட்ட வந்துள்ளார்.

அப்போது மகேஷ் அவரது அண்ணன் தாய் மற்றும் நண்பரே வெட்டியது தெரியவந்தது. விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து போலீசார் திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்த கஜேந்திரன் (21), கோயில்பதாகையை சேர்ந்த ஆனந்த் (22) உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்து தலைமறைவான கரணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!