மலையாள சங்கத்தின் 12 ஆண்டு துவக்க விழா
மலையாள சங்கத்தின் 12 ஆண்டு துவக்க விழா
சென்னை புறநகர் பகுதியான ஆவடி ஓசி எப் பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட மலையாள அசோசியன் சங்கத்தின் 12 ஆம் ஆண்டு துவக்க விழா திருவள்ளூர் மாவட்ட மலையாள அசோசியன் மாவட்ட தலைவர் ஹை டெக் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோகுலன் கோபாலன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்பு மலையாளிபாரம்பரிய செண்டை மேளம் அடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர். பின்பு குடும்பத் தலைவிபெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. அதற்குப் பிறகு ஆண்களுக்கான கயிறு இழுத்தல், குழந்தைகளுக்கான நடனம், பேச்சுப்போட்டி, ஆடல், பாடல் கடைசியாக மலையாள நடிகர்கள் வேஷம் போட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன
இந்த ஆண்டு 10மற்றும்12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளும் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வரும் பின்பு கதகளி நடன ஆசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கோப்பைகளும் ஊக்க தொகைகளும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், பூந்தமல்லி, திருநின்றவூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த மலையாள அசோசியன் சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கி கௌரவ படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu