குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை; கணவர் கைது

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை; கணவர் கைது
X
திருநின்றவூரில் குழந்தைகளை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநின்றவூர் நடுகுத்தகை திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் பெயிண்டர். இவரது மனைவி கௌரி, இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு ரக்ஷிதா என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.

இதற்கிடையில் ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கௌரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 18ஆம் தேதி கௌரி ஏலச்சீட்டு எடுத்து பணம் வைத்திருந்தது ரமேஷ்க்கு தெரிந்தது. அதிலிருந்து மது அருந்த பணம் கேட்டு உள்ளார். ஆனால், அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவி கௌரியிடம் ரமேஷ் தகராறு செய்துள்ளார். பின்னர், கெளரி வீட்டிலிருந்து வெளியேறி, மன உளைச்சலில் குழந்தைகளை தூக்கில் தொங்கிவிட்டுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்கொலைக்கு காரணமான ரமேஷை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!