நள்ளிரவு குடிபோதை தகராறு -பாலிடெக்னிக் மாணவன் அடித்துக்கொலை..!

நள்ளிரவு குடிபோதை  தகராறு  -பாலிடெக்னிக் மாணவன் அடித்துக்கொலை..!
X
கோணம்பேட்டில் நள்ளிரவில் குடிபோதையில் தகராறு: பாலிடெக்னிக் மாணவன் அடித்துக்கொலை- ஆவடியில் பரபரப்பு.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கணேசன். இவர் தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று இரவு கணேசன் தனது நண்பர் சக்திவேல், ரங்கசாமி ஆகியோருடன் தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த கோனம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் எங்கள் பகுதியில் வந்து நீங்கள் ஏன் மது அருந்துகிறார்கள் என கேட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கணேசன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு அங்கிருந்து பைக்கில் புறப்பட்டார். அப்போது ஆவடி கோணம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஷ்ணு என்பவரது பைக் மீது கணேசன் பைக் மோதியது. இதனையடுத்து, அவர் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே வாழ்ந்துள்ளனர். அப்போது கணேசன் தரப்பிற்கும் விஷ்ணு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கணேசன், விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கணேசன் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த விஷ்ணு மற்றும் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தகவலறிந்து விரைந்து உறவினர் பின்னர் அவர் கணேசனின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் கணேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!