லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் போராட்டம்

லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் போராட்டம்
X

சென்னை அம்பத்தூரில் அரசு பள்ளி மாணவிகள் 200 பேர் லேப்டாப் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு லேப்டாப் இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பின்னர் 2019-2020 ம் ஆண்டு பயின்ற மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கியுள்ளனர். அதனால் 2017-2018 ம் ஆண்டு பயின்று தேர்ச்சி அடைந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் தீபா சத்தியன் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு அடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில் 2017-18ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். லேப்டாப் வழங்குவது குறித்து உரிய பதில் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!