கோயிலின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேருக்கு காயம்

திருவள்ளூர் அருகே கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் 12 வயது சிறுமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் தென்காரணி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருடைய 12 வயது மகள் வைஷ்ணவி, 2 வயது குழந்தை சஜித் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 20 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயிலில் விளையாடி கொண்டிருந்தனர், அப்போது, கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்நு விழுந்தது. அதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவருக்கும் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!