திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
X
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியசாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கான குடிநீர் தேவையை காவிரி ஆறு குடிநீர் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாமுண்டியபுரம் பகுதியில் கடந்த 10 நாளுக்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் கூறுகையில், சாண்முடிபுரத்திற்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம், 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனர்.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்