திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

திருப்பூரில், குடிமைப்பொருள் அதிகாரிகளின் சோதனையில், 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும்படை தனி தாசில்தார் சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்கும் மில்லில் 10 மூட்டை ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture