ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

இராதாபுரம் அருகே ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் திருக்கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆவரைகுளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், வருஷாபிஷேக கும்பாபிஷேகம், தேர் ரத வீதி வழியாக யானையுடன் கொடி பட்டம் பவனி வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் தினேஷ் புளுமெட்டல் உரிமையாளர் க.தினேஷ் கொடியேற்றி வைத்தார். அதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலானர் ஜெயபாரத் வரவேற்றார் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர் முன்னாள் கமிட்டி தலைவர் தாமோதரன், பொருளாளர் சக்திவேல், கமிட்டி தலைவர் பா.ராமகிருஷ்ணன், துணைச் தலைவர் இ.மணி, துணைச்செயலாளர் சு.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் ரா.தங்கராசா, பி.அய்யாசாமி, வே.ராசா, சி.தி.ராஜதுரை, பெ.தங்கராசர் ஆகியோர் கலந்து காெண்டனர். மதியம் சிறப்பு பூஜையுடன் அன்னதானம், வினாடி-வினா கேட்டு பரிசு வழங்குதல் நடைபெற்றது. மாலையில் சமய மாநாடு, சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமும் அன்னதானம், சிறப்பு பூஜை, சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, 1008 திருவிளக்கு பூஜை, வில்லிசை, வாணவேடிக்கை, செண்டை மேளம், சதுர்த்தி சிறப்பு பூஜைகள், சஷ்டி விரத சிறப்பு பூஜைகள், பவுர்ணமி சிறப்பு பூஜைகள், சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜைகள், பைரவர் சிறப்பு பூஜைகள், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள், நவராத்திரி கொலு சிறப்பு பூஜைகள், ஸ்ரீவெள்ளை மாரியம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஸ்ரீவேதானம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. ஸ்ரீ முத்தாரம்மனுக்கு தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் நிர்வாக கமிட்டி மற்றும் ஆவரைகுளம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்