புகைப்பட கலைஞர்களுக்கு ஊரடங்கில் வெளியே செல்ல அனுமதிக் கேட்டு ஆட்சியரிடம் மனு

புகைப்பட கலைஞர்களுக்கு ஊரடங்கில் வெளியே செல்ல அனுமதிக் கேட்டு ஆட்சியரிடம் மனு
X
வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் தொழில் சார்ந்த பணி காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு சென்றுவர அனுமதி உத்தரவு வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரமே முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளிலேயே உள்ளது.

மேலும் பொது நிகழ்வுகளை சார்ந்தும் உள்ளது. மேலும் பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இருப்பதால், ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரவு 10.00 மணிக்கு மேலும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவிட்டு வரும் கலைஞர்களை அனுமதிக்க வேண்டும.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் சங்கத் தலைவர் நிக்சன் சகாயராஜ். செயலாளர் ராஜாராம், பொருளாளர் ஜீவானந்தம், துணைத் தலைவர்கள் கென்னடி, ஜூல்ஃபி அகமத் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story