கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு

கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு
X

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவிற்கான சிறப்பு மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

கருணாநிதியின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தொகுப்பு ஊதியம் ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கியதற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்து சிறப்பு மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவிற்கான சிறப்பு மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் தி.அருள்குமார், மாநில பொருளாளர் ப.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்மறைந்த முன்னாள் மாநில செயலாளர் ரமேஷ் படத்திறப்பு விழா மற்றும் தமிழக முதல்வர் வாழ்த்தி அவர் தயாரித்த பாடலை வெளியிடுவது.

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 53000 ஆசிரியர்களை தனது ஒரே கையொழுத்தில் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தர செய்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடத்தில் அவரை நன்றி மறவாமல் நினைவு கூறும் வகையில் 53,000 மாணவர்களுக்கு 53,000 பேனாக்கள் வழங்குவது.

சங்கம் கடந்த வந்த பாதை இதழ் வெளியிடுதல்,சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்குதல், சிறந்த மாணவர் களுக்கான இளஞ்சூரியன் விருது வழங்குதல், ஓய்வு ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல்,உள்ளடக்கிய ஐம்பெரும் விழாவினை வரும் 21.05.2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்துவது.

இந்த விழாவில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 100 ஆசிரியர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிப்பது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், கல்வித்துறை உயரதிகாரிகள், அலுவலக நண்பர்கள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிற்பிக்க உள்ளதால் விழாவை வெகு விமரிசையாக நடத்திடவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும்.ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியை உயர்வை உடனடியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு ஒப்படைப்பை விரைவில் விடுவித்து சரண்டர் ஊதியம் வழங்கிட வேண்டும்.

171 பகுதி நேர தொழிற்கல்வி கல்வி ஆசிரியர்களை விரைவாக காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.13,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய நடைமுறைப்படி வழங்கிட வேண்டும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கு தடையாக உள்ள நீதிமன்ற தடைக்களுக்கு தீர்வு கண்டு விரைந்து கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்கிய பிறகு நடத்திட வேண்டும்.

ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்ச்சியானது பணியில் இருப்போருக்கு விலக்களிக்கும் வகையில் விரைவில் உரிய கொள்கை முடிவை எடுத்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி இந்தாண்டு பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும். கல்லூரி உதவி பேராசிரியர் தகுதியுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், மாநில தலைமை நிலைய செயலாளர் கி.கண்ணதாசன், மாநில செய்தி தொடர்பாளர் கு.மஞ்சுநாதன் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் நித்ய நிர்மல், மெஹராஜ் பேகம் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக திருச்சி மாவட்டச் செயலாளர் உதுமான் அலி நன்றி கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!