நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை

நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை
X

நுண்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி,5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளவற்றில் நுண் பார்வையாளர்கள் பணி அமர்த்தப்படுகிறர்கள்.இந்த நுண் பார்வையாளர்களுடன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பங்கேற்று அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!