பிச்சாண்டார்கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்

பிச்சாண்டார்கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமி்ல் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் செல்வி விஜயகுமார் முனனிலை வகித்தார்.இதில் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கவிதா செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கம்மாள், மூர்த்தி, ராஜ்குமார், பூர்ணவள்ளி, செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன், யூனியன் இன்ஜினியர் விமலா, மேற்பார்வையாளர், பரமேஸ்வரி, அஞ்சுகம், புவனேஷ்வரி உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story
ai marketing future