தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி

தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி
X
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் உள்ளது. இதில் திருவெள்ளறை ஊராட்சி 9 வார்டுகளை உள்ளடங்கியுள்ளது. இந்த ஊராட்சியில் 8 ஆயிரத்து 438 மக்கள் தொகையினைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சியில் பிரசித்திப் பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. திருவெள்ளறை ஊராட்சியில் காலவாய்ப்பட்டி, திருவெள்ளரை, தெற்கு சாலக்காடு, சின்னக்காட்டுகுளம், செங்குடித்தெரு, மணலிபள்ளம், புண்ணாகுளம் போன்ற கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 4 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அதிளவில் தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர். இந்த முகாமில் தடுப்பூசி போட மக்கள் முன் வந்து செலுத்திக் கொள்கின்றனர். ஆனால் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தடுப்பூசி செலுத்து வருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தற்போது பரிசுப் பொருட்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 4,075 வாக்களர்கள் அனைவரும் கடந்த 90 நாட்களில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்ற பெருமையினை பெற்றுள்ளது இந்த ஊராட்சி.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil