திருவாரூரில் ஆசிரியரிடம் ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திருவாரூரில் ஆசிரியரிடம்  ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
X
திருவாரூரில் ஆசிரியரிடம் வழிபறி செய்யப்பட்ட ரூ 4 லட்சத்து, 60 ஆயிரம் பணத்தை போலீசார் 15 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த 21.04.21ந் தேதி மன்னார்குடி அரிச்சபுரம், புதுதெருவினை சேர்ந்த ஆசிரியர் கண்ணன்(41) என்பவர் ரூ.4,60,000 பணம் எடுத்தார். வங்கியிலிருந்து வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியரின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் ஆசிரியர் கண்ணன் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிகளை கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பனாலா பரசாந்த் (22), மேக்கல பிரசன்னகுமார்(25) மேக்கல பிரவீன்குமார்(22), சன்னா உதயகிரண் (19) ஆகிய நால்வரையும் சுற்றி வலைத்து பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.4.60,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறிகொடுத்த ஆசிரியர் கண்ணனிடம் மாவட்ட கண்காணிப்பாளர் கயல்விழி ஒப்படைத்தார். சிறப்பாக செயல்பட்டு புகாரளித்த 15 மணிநேரத்திற்க்குள் குற்றவாளிகளை பிடித்து பணத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு போலீஸ் எஸ்.பி சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா