மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு

வைகை அணை நீர் மட்டம் 68.41 அடியாக உள்ளது. மொத்த நீர் மட்ட உயரம் 71 அடி. ஆனால் அணை நீர் மட்டம் 69 அடியை எட்டியுடன் அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும். தொடர்ச்சியாக எட்டு மாதங்களை கடந்தும் வைகை அணை நீர் மட்டம் முழுமையாக நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல லட்சம் பேர் கூடும் இந்நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இந்த விழாவிற்காக நேற்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி வரை நீர் திறப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu