வழிப்பறி திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வழிப்பறி திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
தேவதானப்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்டு கைதான திருடன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் முரளீதரன் வழிப்பறி குற்றவாளி தங்கப்பாண்டியை குண்டர்தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா