லோயர்கேம்ப் - மதுரைகுழாய் வழியே குடிநீர் திட்டம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

லோயர்கேம்ப் - மதுரைகுழாய் வழியே  குடிநீர் திட்டம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியே குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

மதுரைக்கு குடிநீரை குழாய் வழியாக கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்து ஆறு வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம், லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய் வழியே குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியே மதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு மாநில அரசு 1296 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரைக்கு குடிநீரை குழாய் வழியாக கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்து, தற்போதைய நடைமுறைப்படி ஆறு வழியாகவே கொண்டு சென்று எடுத்துக் கொள்ளுங்கள். குழாய் வழியாக குடிநீர் கொண்டு சென்றால் வழியோர நிலங்கள் எல்லாம் நிலத்தடி நீர் வசதி கிடைக்காமல், பாலைவனமாகி விடும் என கூடலுார், கம்பம், தேனி பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற சமரச கூட்டமும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இன்று மதியம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக, கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர், தேனி மாவட்ட விவசாய சங்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மதுரைக்கு குடிநீரை குழாய் வழியாக கொண்டு செல்லாமல், வாய்க்கால், ஆறு வழியாக கொண்டு சென்று நிலத்தடி நீருக்கு பாதிப்பு வராமல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!