திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி

திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
X

திருவையாறில் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.

திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.

திருவையாறு அடுத்த மருவூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி, 45. மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த தொடர் மழையால், வீடு இடிந்து விழுந்தது. இதில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் தேவகியின் கணவன் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த மருவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் இடிபாட்டில் சிக்கிய தேவியின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!