தஞ்சாவூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

தஞ்சாவூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
X
தஞ்சாவூரில் இன்று 5 இடங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டாம் தவணை செலுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் பத்து இடங்களில் 1,390 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 என பத்து மையங்களில் முதலில் வரும் 1,390 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று அனைத்து மையங்களிலும் கோவாக்சின் இரண்டாம் கட்ட தவனை தடுப்பூசி போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!