அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

அறுவடைக்கு தயாராக இருந்த  சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
X
தஞ்சாவூர்: அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கதிர் வந்துள்ள நிலையில், இன்னும் 10 நாட்களுக்குள் அறுவடை தயாராக இருந்த பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி உள்ளது ‌. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ளோம், மழை உள்ளிட்ட பாதிப்புகளை மீறி பயிர்களை காப்பாற்றி, தற்போது கதிர் வந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் மழையால், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான பயிகள் விளைநிலத்தில் நீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அப்படியே படுத்து அழுகிவிடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய சூழலில் இருப்பதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து, பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!