திருவிடை மருதூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

திருவிடை மருதூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்
X

திருவிடைமருதூர் அருகே தேப்பெருமாள் நல்லூரில் மழை நீரால் சூழப்பட்ட வீடுகள்.

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த தேப்பெருமாநல்லூர் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. அதுமட்டுமின்றி கழிவுநீருடன், மழைநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!