கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம்
கும்பகோணம் பகுதி சிவாலயத்தில் தேரோட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய 4 சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழா கடந்த 9-ம் தேதி அந்தந்த கோயில்களில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவில் கடந்த 13-ம் தேதி ஓலை சப்பரமும், 15-ம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இதையடுத்து நாகேஸ்வரன் கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்,
இதைத் தொடர்ந்து (18-ம் தேதி) பங்குனி உத்திர திருவிழா அன்று மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாத சுவாமி கோயில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி வைபவமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதே போல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu