சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று 8,053 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது -மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று 8,053 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது -மாநகராட்சி ஆணையாளர்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று 8,053 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மாநகரப் பகுதிகளில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்களின் வாயிலாக 7,020 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,033 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 183 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 32 ஆயிரத்து 663 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு அடிப்படையில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பட்டி ஸ்ரீ வீரலட்சுமி மேல்நிலைப் பள்ளி, எருமாபாளையம் உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!