தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது நிறுத்தம்!

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது நிறுத்தம்!
X

சேலத்தில், தடுப்பூசி போடப்படாது என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள். 

சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை உள்பட மொத்தம் 120 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்ட்டு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சேலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசிகள், பொதுமக்களுக்கு நேற்று வரை செலுத்தப்பட்டதால், தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அதன் காரணமாக, பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் வரும் 10 ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்படாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள ஆர்வமாக மையங்களுக்குச் சென்ற பொதுமக்கள், அறிவிப்புப் பலகையை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 100 பேர்; இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 700 பேர் என, மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!