சேலத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

சேலத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
X

சேலத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கீதாபிரியா என்பவர் கடந்த 18ம் தேதி செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக வங்கியின் வெளியே சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் கீதாபிரியாவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் பறிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கீதாபிரியா இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!