கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் அறிவுரை வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் கொரோனா விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்
கீரனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒடுக்கூரில் உள்ள ஒரு குளத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவையும் கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதாக எஸ்ஐ இளையராஜாவிற்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற எஸ்ஐ இளையராஜா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களை வரிசையில் நிற்க வைத்தார்.
மேலும் அந்த இளைஞர்களிடம் கொரோனா பாதிப்பின் தீவிரத் தன்மை குறித்தும் ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டால் அந்தக் குடும்பம் மீள்வதற்கு 20 ஆண்டுகள் ஆகிறது என்றும், அதுமட்டுமின்றி இன்றைய நிலையில் இறுதிச் சடங்குகள் செய்யக்கூட உறவினர்கள் வர தயக்கம் காட்டுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் தன் மனைவி உடல்நலக்குறைவால் இறந்து 19 நாட்களே ஆகிறது என்றும் அந்த இழப்பை எல்லாம் தாங்கிக்கொண்டு இந்த நிலையில் கூட தான் அறிவுரை கூறுகிறேன் என்றால் ஒரு உயிரின் வலி என்ன என்பது தனக்கு புரியும் என்றும் உருக்கமாக அவர் அந்த இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இதனைக்கேட்ட இளைஞர்கள் அனைவரும் வீடுகளுக்கு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu