கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கீரனூர் பேரூராட்சியில்  கொரோனா  கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில்  வீடு, வீடாக முன்கள பணியாளர்கள்  கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியின் ஒவ்வொரு வீடாக சென்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இன்று கோவிட்19 கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

பேரூராட்சியின் முன் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பரிசோதனை செய்தவர்கள் மற்றும் பரிசோதனை செய்யாதவர்கள் பற்றியும் கீரனூர் வடக்கு ரதவீதியில் தீவிரமாக கணக்கெடுத்தனர்.

மேலும் அங்கு வசிக்கும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது

Tags

Next Story
ai marketing future