கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
X

புதுக்கோட்டை  மாவட்டம் கீரனூர் அருகே மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்  சாமி சிலைகள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ,கீரனூர் அருகே ,கீழநாஞ்சூர் கிராமத்தில், விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகளும் உள்ளன.

இந்த கோயில், முன்னர் கீழநாஞ்சூர் அக்கிரகாரத்தில் வசித்து வந்த அந்தணர்கள் வசம் இருந்தது. தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை வசம் உள்ளது.

இந்நிலையில் கோவில் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்ட்டது . இதை அறிந்து, கீழநாஞ்சூர் ஊர் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசார், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு புகார் மனுக்களை அளித்துள்ளனர்.

இதை அறிந்த ஆன்மீக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்,கோயிலை புனரமைக்கவும், சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரியும் ,காவல்துறை மற்றும் அறநிலை துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

புகார் மனுக்களை ஏற்ற கீரனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!