வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு கலெக்டரிடம் மனு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
X

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.இவருக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அகிலா என்ற மனைவியும் இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு உன் சவுதி அரேபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்குள்ள பின் ஜாரல்ல குரூப் ஆப் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் அங்கிருந்து அவ்வப்போது அனுப்பும் சொற்ப பணத்தை கொண்டு அகிலா இங்க இருந்து தனது மூன்று குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுக்காலை சவுதி அரேபியாவில் பணியாற்றிவந்த ரவிச்சந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அங்குள்ள சக தொழிலாளர்கள் அவரது மனைவி அகிலாவிடம் தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலா மற்றும் அவரது குழந்தைகள் செய்வதறியாதுதவித்துள்ளனர். இந்நிலையில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவிட வேண்டும்

கணவரை இழந்த தங்களது குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவரது மனைவி அகிலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து என்று கண்ணீர் மல்க மனு அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!