உதகை அருகே தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு, பெற்றோர்கள் முற்றுகை
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பர்ன்ஹில் மற்றும் காந்தள் பகுதியில் வசித்து வருபவர்கள் ரேணுகா ராஜ்குமார் மற்றும் லலிதா ஆனந்த் தம்பதிகள். இவர்கள் தங்களுடைய ஒன்றரை வயது மற்றும் 2 மாதம் ஆன கை குழந்தை என இரு குழந்தைகளுக்கும் இன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுள்ளனர்.மதியம் தடுப்பூசி போட்டது முதல் மாலை 5 மணி வரை குழந்தைகள் நல்ல நிலையில் இருந்துள்ளது.
பின்பு திடீரென இரு குழந்தைகளுக்கும் வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக இரு குழந்தைகளும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.மருத்துவமனனையில் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குளிரின் தாக்கம் அதிகமானதால் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படிருக்கலாம் என கூறி சிகிச்சையளித்துள்ளனர் .
இருப்பினும் ஒரு குழந்தையின் உடல் நலம் தேறிய நிலையில் மற்றொரு குழந்தையின் உடல் நிலை மோசமானதால் உடனடியாக அந்த குழந்தையை இரவு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதால் தான் உடல்நிலை மோசமானது என கூறி பெற்றோர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மேலும் பெற்றோர்கள் கூறுகையில் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை இங்கு தரமானதாக இல்லை எனவும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊசிகளும் வெளியில் இருந்து வாங்கி வந்து இங்கு கொடுத்தும் இந்த நிலை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியிள்ளனர்.பின்னர் காவல் துறையினர் பெற்றோர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu