ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு

ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு
X

உதகை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தூய்மைப்பணியாளர்கள். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; 3 மாதம் நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என, உதகைஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரங்கோடு பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் தற்போது பெற்று வரும் நிலையில் குழந்தைகளுக்கான கல்வி செலவு மட்டுமல்லாமல் நாள்தோறும் தேவைப்படும் செலவினங்களுக்காக 120 ரூபாய் என்பது குறைவான தொகையாக உள்ளதாகவும் எனவே நாள்தோறும் பணி செய்யும் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மூன்று மாதம் நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என உதகை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india