உதகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைப்பு
கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி மூலம் சுகப்பிரசவத்தை உறுதிபடுத்தும் பொருட்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அம்ரித் மஹோத்ஸவ் திட்டத்தை உதகை அருகேயுள்ள முத்த நாடு மந்து கிராமத்தில் மாநில மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் ம சுப்ரமணியம் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர்
இத்திட்டம் படிப்படியாக மாநிலத்தின் 4448 கிராமங்களுக்கு விரிவு படுத்த படும். இதேப்போன்று ஆரம்ப சுகாதார நிலையத்திலிருக்கும் மருத்துவரிடமிருந்து மருத்துவ வசதி பெறும் திட்டமும் அனைத்து பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
மக்களை தேடி மருத்துவ திட்டம் என்ற நடமாடும் மருத்துவ சேவை மாநிலத்தின் 389 வட்டாரங்களுக்கு விரிவு படுத்தப்படும் . கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக முத்த நாடு தோடர் பழங்குடியின கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பயிற்சியை பார்வையிட்டு அவர்களுடன் யோகா பயிற்சியை அமைச்சர் செய்தார்.
மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித், தமிழ்நாடு மருத்துவ பணிகள் துறை இயக்குனர் செல்வ விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu