கோடநாடு வழக்கு விசாரணை: நாளை இருவர் ஆஜராக சம்மன்

கோடநாடு வழக்கு விசாரணை: நாளை இருவர் ஆஜராக சம்மன்
X

பைல் படம்.

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5, 6 ம் நபர்கள் நாளை ஆஜராக உத்தரவு.

கோடநாடு வழக்கு ஒவ்வொரு நாளும் மறுவிசாரணை பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக கருதப்படும் சயான், மற்றும் நான்காம் நபர் ஜம்சீர் அலி, 8 ம் நபர் சந்தோஷ் சாமி, 9 ம் நபர் மனோஜ்சாமி என இதுவரை நான்கு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை 5 ம் நபர் சதீசன், ஆறாம் நபர் பிஜுன் குட்டி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்து மற்றும் ஆறாம் நபர்களாக உள்ள சதீஷன், பிஜுன் குட்டி உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளனர். மேற்கு மண்டல ஐஜி மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

கோடநாடு கொலை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் அவர்களுக்காக கூறப்படும் நாட்களில் ஆஜராவர் என தெரிகிறது. மேலும் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்திற்கு வர உள்ளதால் அதற்குள் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!