கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு

கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு
X

பைல் படம்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணையானது உதகையில் நடந்து வரும் நிலையில் சாட்சியங்களிடமும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் உறவினர் ரமேஷ் ஆகிய இருவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ளனர்.

இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்த நிலையில் கனகராஜன் சகோதரருக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்றுடன் கனகராஜின் சகோதரருக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் கனகராஜன் சகோதரர் தனபால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் அவரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று கனகராஜன் உறவினர் ரமேஷ்க்கு இன்றுடன் 5 நாள் காவல் விசாரணை முடிவடையும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் காவலில் விசாரிக்க போலீசார் சார்பில் 7 நாட்கள் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்