உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்

உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்
X
10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்களால் நீர் மாசுபடுவதாக மக்கள் வேதனை

உதகை அருகே மார்லி மந்து என்னும் அணைப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கடா மான்கள் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும் இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன.உதகை நகரை சுற்றியுள்ள பெரும்பாலான அணைகள் அடர் வனப்பகுதிகளில் உள்ளன.

இந்நிலையில் உதகை மார்லி மந்து அணை அருகே 20க்கும் மேற்பட்ட கடா மான்கள் அழுகிய நிலையில் எலும்புக் கூடுகளாக கிடக்கிறது.இந்த வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் , சிறுத்தை புலி உள்ளிட்ட மாமிச வனவிலங்குகள் நடமாடி வருவதாகவும் நீர் அருந்தவரும் மான்களை வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் அணைகளின் ஓரத்தில் எலும்புக்கூடுகளால் துர்நாற்றம் வீசி காணப்படுவதால் நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதால் பொதுமக்களுக்கு நோய் உபாதைகள் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே இறந்து கிடக்கும் மான்களின் எலும்பு கூடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail