கட்டணமில்லா கழிப்பிடத்திற்கு வீட்டு 50 ரூபாய் பணம் வசுலிப்பதாக புகார் -மக்கள் சாலைமறியல்
உதகமண்டலம் நகராட்சி 10 வது வார்டு காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியில் நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்த பொது கழிப்பிடம் நகராட்சி மூலம் பழுது சரிசெய்து புனரமைப்பு செய்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
புனரமைப்பு செய்யப்பட்ட கழிப்பிடத்தை நகரமன்ற தலைவர் வாணிஸ்வரி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார் அவர்களும் நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், அபுதாஹிர், கீதா , திவ்யா, ரீட்டமேரி , மீனா மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சமது, ஜெரால்டு, வசீம், திவாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இந்த கட்டணமில்லா கழிப்பிடத்திற்கு வீட்டு 50 ரூபாய் பணம் வசுலிப்பதாகவும், தங்களை சாதிபெயர் சொல்லி பழிப்பதாகவும் ஒரு பிரிவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஜி 1 காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu