ஊட்டி மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு கொரானா பரிசோதனை

ஊட்டி மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு கொரானா பரிசோதனை
X
ஊட்டி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து, கிருமி நாசினி பயன்படுத்திய பின்பு பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிரது. இதை கட்டுப்படுத்த, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் உழவர் சந்தை, பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில், நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஊட்டி மார்க்கெட் பகுதி வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து கிருமி நாசினி பயன்படுத்திய பின்பு பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள 16 நுழைவாயில் பகுதிகளிலும் நகராட்சி நிர்வாகமானது ஊழியர்களை கொண்டு இப்பணியை நாள்தோறும் செய்து வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture