குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்

குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
X

தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரியும் யானைகள்.

தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலகம்பை அருகே கடந்த பத்து நாட்களாக 5 யானைகள் லூசின எஸ்டேட், பவானி எஸ்டேட், முத்துநாடு எஸ்டேட் பகுதிகளில் வலம் வருகின்றன. பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் வலம் வருவதால், அன்றாட பணிகளுக்கு செல்வதற்கு உயிரை பணையம் வைத்து செல்கின்றனர்.

மேலும், யானைகளின் அட்டகாசத்தால் எஸ்டேட்க்கு சொந்தமான உறக்கிடங்குகள், மரங்கள், குடியிருப்பு பகுதிகள் சேதம் அடைகின்றன. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், யானைகள் இன்னும் அதே பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!